சர்வதேச தண்ணீர் தினம் - மார்ச் 22
சர்வதேச தண்ணீர் கூட்டுறவு ஆண்டு 2013
இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கிரகங்களையும் விட பூமிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்ததற்கு காரணம் அதில் கிடைக்கக் கூடிய தண்ணீர். அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானது இந்த தண்ணீர்.ஒவ்வொரு உயிரினமும் சுமார் 70 சதவீதம் தண்ணீராலானது. முன்னெப்போதையும் விட இந் நூற்றாண்டில் தான் நீரின் மகத்துவம் குறித்த தௌவு அதிகமாகியிருக்கிறது.
பன்னெடுங்காலமாகவே நீரை ஆற்றலுக்காகவும், போக்குவரத்திற்காகவும், பாசனத்திற் காகவும் மனிதன் பயன்படுத்தி வந்திருக்கிறான். நீர் நம் ஆதாரத் தேவை. இந்த உலகின் பல்வேறு நாகரீகங்கள் ஆற்றங்கரையிலிருந்து தான் தோன்றியிருக் கிறது. திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருக்கும் ஒரே வேதிப் பொருள் தண்ணீர் தான். அதற்கென தனி நிறமோ, சுவையோ, பணமோ கிடையாது. இவ்வளவு ஏன்? உலகின் முதல் உயிரினம் நீரில் தான் தோன்றியதாக பரினாமவியலாளர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட தண்ணீர் அதன் புனிதத் தன்மையோடு இருக்கிறதா? தண்ணீரைப் பழித்தவனை தாயைப் பழித்தவனுக்கு இணையாகச் சொல்கிறோமே! ஏன்! இவ்வளவு உணர்ந்தும் நாம் தண்ணீர் வளங்களை பாதுகாக்கிறோமா?
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழ ஆரம்பித்ததற்கு காரணம் உழவுத் தொழிலும் அதனைச் செயலாக்கும் வற்றாத நதிகளும் தான். ஆற்றுப் படுகைகளல் தான் தங்கள் வாழ்வை தொடங்க ஆரம்பித்தார்கள். பெரும்பாலான நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தான் தொடங்கியிருக்கிறது.
வாழ்க்கை நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை தண்ணீர் துறை பார்த்தே இருக்கிறது. தண்ணீர் நம் உயிரிலும் சரி, உடலிலும் சரி பிரதான பங்கை வகிக்கிறது.
மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலரப் புரட்சி சிவப்புப் புரட்சி, பழுப்பு புரட்சி என்று பலவகை புரட்சிகளுக்குப் பிறகு தண்ணீர் மாசுபட ஆரம்பித்துவிட்டது. இன்று சுத்தமான நீர் கிடைப்பது அரிதாகி விட்டது. வருடந்தோறும் நீரினால் ஏற்படும் நோய்களில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள் குறிப்பாக, வயிற்றுப்போக்கின் மூலம்.
"நீரின்றி அமையா ஆக்கைக்கெல்லாம் " என்று புற நாணுற்றுப் பாடலுண்டு. மனசில ஈரம் இருந்தா இப்படி பேசுவியா? நீரை வணங்குவது, நதிகளைப் போற்றுவது என கலாச்சார ரீதியாகவும் நீருக்கு முக்கித்துவம் கொடுத்துருக் கொண்டேதான் வந்திருக்கிறோம்.
புவியின் மொத்த நீர் அளவினைக் கணக்கிட்டால், 200,000,000 சதுர மைல் பரப்பில், கிட்டத்தட்ட 97 சதவீதம் உப்பு நீர்தான். மீதமுள்ள 3சதவீதத்தில் தான் நன்நீர் உள்ளது. அதில் 2.2 சதவீதம் ஆறுள், குளங்கள், ஏரிகள், நதிகள் போன்ற நீர்நிலைகளாகவும், சுமார் 0.5 சதவீதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. இவ்வளவு குறைந்தநீரை அதன் வளம் குறையாமல் வைத்திருக்கிறோமா? பெருகி வரும் மாசுக்களிடமிருந்தும், புவி வெப்பமயத்திலிருந்தும் எப்படி தக்க வைத்துக்கொள்ளப் போகிறோம்! நைல்நதி பாயாவிட்டால் எகிப்தும் பாலைவனமாகி இருக்கும் என்ற சொல் வழக்கு உண்டு.
நீர் அளவு குறைந்தால் என்ன ஆகும? வற்றிய ஏரிகள், குளங்கள், மணலோடும் நதிகள்இ சாக்கடை ஓடிய ஆறுகள் நம் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது? பாலாறும்இ தேனாறும் பாயவே பாயாதா? ஏராளமான குழப்பத்தோடும் நீரைக்காக்க போதுமான முன் நடவடிக்கைகளும், திட்டங்களும் இல்லாமல் எதிர்கால சந்ததியிருக்கு நல வாழ்வு சாத்தியமா?
உறவை அறுத்துக்கொள்ள வேண்டுமானால் இன்றும் தண்ணீரை வைத்துத்தான் முடிவு செய்கிறார்கள் இந்தியாவில். தறுதலையாய் திரியும் மகனை வெறுக்கும் அப்பா கூட தண்ணி தெளித்து விட்டாயிற்று என்றே ஆத்திரப்படுகிறார். ஏன் தண்ணீரை வெறுப்பேற்றும் செயலுக்கு ஒப்பிடுகிறார்கள். என்றே புரிவதல்லை. கிட்டத்தட்ட உலகின் ஐம்பெருங்கண்டங்களிலுள்ள சுமார் 50 நாடுகள் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான சண்டைகள் அணைத் தேக்கங்களுக்காகவும், நதிகளுக்காகவும், நிலத்தடி நீருக்காகவும் நடக்கிறது என்கிறார்கள். தண்ணீருக்கென தனி ஒரு அரசியலே நடந்து கொண்டிருக்கிறது.
சாட், எமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் சண்டை பெரும்பாலும் தண்ணீர் பங்கீடுகளுக்காகவே நடந்தேறியிருக்கிறது. கென்யாவின் தானா ஆற்றுப்படுகை மாவட்டத்தில் மட்டும் தண்ணீரின் காரணமாக ஏற்பட்ட தகறாரில் பழிவாங்கும் முகமாக 8 குழந்தைகள்இ 16 ஆண்கள் 9 போலீஸ் அதிகாரிகள் சென்ற ஆண்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடலில் மீன் பிடிப்பதில் ஆரம்பித்து, நதி நீர் பங்கீடு, நிலத்தடி நீர் என்று எங்கு பார்த்தாலும் தண்ணீர் சார்ந்த சண்டைகள், ஆப்ரிக்காவின் நைல் நதிச் சண்டையிலிருந்து, பிரம்மபுத்திரா தொடங்கி, காவிரி, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு என்று எதையெடுத்தாலும் பிரச்சனை. அதனால் உருவாக்கும் அரசியல் சண்டை இவற்றிற்கு முடிவே கிடையாதா? நாமெல்லாம் ஒத்துப்போக வேண்டும். விட்டுப்கொடுக்க வேண்டும். அதன் முகமாகவே இந்த ஆண்டை தண்ணீர் கூட்டுறவிற்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது ஐ.நா.சபை.
புவி வெப்பமடைதலுக்கான அனைத்து காரணிகளாலும் பருவமழை பொய்த்து விட்டது. பருவமழை பொய்த்து விடுதலால் நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நதி நீர் பங்கீடு குறித்த தெளிவான புரிதல் நாடுகளுக்கிடையேயும், தேசத்தின் மாநிலங்களுக்கிடையேயும் ஏற்படுத்தக் கூடிய அமைப்பு தேவையாயிருக்கிறது. அதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபை சில விஷயங்களை முன்னெடுத்துச் செல்கிறது அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள்குறித்த விழிப்புணர்வை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் முகமாக வருடங்களின் சில நாட்களை தேர்வு செய்து அந்தந்த நாட்களின் மூலம் பல கருத்துக்களை ஊர்வலங்கள், கருத்துரைகள், பாடல்கள், சுவரொட்டிகள் என்றுவெவ்வேறு வடிவங்களில் முக்கியமான தினங்களை கொண்டாடகிறது. அதில் ஒன்று தான் சர்வதேச தண்ணீர் தினம்
.
முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் 1993-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 22-ஆம் தேதி சர்வதேச தண்ணீர் தினமாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-22ல் வெவ்வேறு கருப்பொருளில் சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதுவரை கொண்டாடப்பட்ட நாட்கள் அதன் கருப்பொருளுடன்
மார்ச் 22இ 1993- முதல் சர்வதேச தண்ணீர் தினம்
1994- நமது நீர்வளங்கைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை
1995 - தண்ணீர் பெண்களும்
1996 தவித்த நகரங்களுக்கான தண்ணீர்
1997 நிலத்தடி நீர்
1998 ஒவ்வொருவரும் தாழ்வான நதிகளின் அருகில் வாழ்கிறோம்.
1999 2000 - 21 ஆம் நூற்றாண்டிற்கான தண்ணீர்
2000 தண்ணீரும் உடல் நலனும்
முன்னேற்றத்திற்கான தண்ணீர்
வருங்காலத்திற்கான தண்ணீர்
தண்ணீரும், பேரிடர்களும்
வாழ்க்கைக்கான தண்ணீர்
தண்ணிரும் பண்பாடும்
தண்ணீர் பற்றாக்குறை
தண்ணீரும் சுகாதாரமும்
(சர்வதேச சுகாதார ஆண்டை முன்னிட்டு)
நாடுகளிக்கிடையேயான தண்ணீர் பங்கீடும் வாய்ப்புகளும்
தண்ணீரின் தரம்
பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல், புவி வெப்பமடைதல், தொழிற்மயம் போன்றவற்றால் நகரங்களில் ஏற்படும் தண்ணீர் சார்ந்த பேரிடர்களும், முரண்களும்.
தண்ணீரும் உணவுப் பாதுகாப்பும்
தண்ணீர் கூட்டுறவிற்கான சர்வதேச ஆண்டு.
கர்நாடகத்தோடு, காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கல், கேரளத்தோடு, முல்லாறு- பெரியாறு நதி நீர் பங்கீடு, ஆந்திரத்தோடு கிருஷ்ணா நதி நீருக்கான போராட்டம் என தமிழகம் தான் எத்தனை சிக்கலை சந்தித்து வருகிறது. நீருக்கான மாநிலச் சண்டை, தேசியச் சண்டை, நாடுகளிக்கிடையேயும் நதிகளுக்கான சண்டை! ஓய்வது தான் எப்போது? தண்ணீர் வளங்களைக் காப்போம்! தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவோம்! தண்ணீர் மாசுபடுவதைத் தடுப்போம்!
நீரின்றி அமையாது உலகு!
No comments:
Post a Comment