Wednesday, March 2, 2011

சர்வதேச காடுகள் ஆண்டு - 2011


சர்வதேச காடுகள் ஆண்டு - 2011

காடுகள் மக்களுக்கே என்ற வாசகத்துடன் ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை (2011) சர்வதேச காடுகள் ஆண்டாக அறிவித்திருக்கிறது. காடுகள் மனிதர்களுக்கும் பிற விலங்கினக்களுக்கும் தாவரங்களுக்கும் இருப்பிடமாகவும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உண்ண உணவு, இருக்க இருப்பிடம் என எல்லாமுமாக இருக்கிறது. காடுகள் தான் இந்த சுற்றுச்சூழலை வளமாக வைக்க உதவுகிறது. காடுகள் இந்த உலகின் சுவாசப்பை. சுமார் நூறு கோடி மக்களையும், ஏழு கோடிக்கும் மேலான கால்நடைகளையும் அரவணைத்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியக்காடுகளின் மொத்தப்பரப்பு சுமார் அறுபத்தினாலு மில்லியன் ஹெக்டேர். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட இருபது சதவீதம். இருபத்தியொரு பெருவகைகளும் இருநூற்றி இருபத்தியொரு சிறு வகை காடுகளையும் உள்ளடக்கியது நமது இந்திய வனம். காடுகள் நான்காயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் காணப்படுவதில்லை. மழை அளவைப்பொறுத்து காடுகள் பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அலையாத்திக்காடுகள் உட்பட அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டியவை.

372 பாலூட்டிகள், 2000 பறவைகள், 1693 மீன்கள் மற்றும் 60,000 பூச்சிகள் என பல சிற்றினங்கள் இந்திய வனங்களை நம்பி இருக்கின்றன. சுமார் 80 சதவீத தரைவாழ் பல்லுயிரியம் காடுகளை சார்ந்தே இருக்கின்றன. மரங்களை அழிப்பதினால் சுமார் 20% கார்பன் வெளியாகி இப்புவியை வெப்பமாகுகிறது என உலக வங்கி தெரிவிக்கிறது. முன்பெல்லாம் மரங்களை வணங்குவதன் மூலம் பெருவாரியான மரங்கள் கோவில் காடுகள் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டன. ஆனால் இன்று அதற்க்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. சிப்கோ மற்றும் அப்பிகோ போன்ற மக்கள் இயக்கங்களின் மூலம் காடுகள் காக்கப்படிருக்கின்றன. நாமும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்வோம். இந்த சர்வதேச காடுகள் ஆண்டில் காடுகளை காப்போம் என உறுதி பூணுவோம்!

வனங்களைகாப்போம்!

தினகரன்

2 comments:

Vilvapathi said...

Sure sir definetaly save ur forest.fight against trafficing of trees.all r join 2 save ur earth

Dinadruvan said...

நன்றி நண்பரே