பஞ்சாரம்
கீதம்
காற்றுக்குப்பதில்
குஞ்சுகள்
எனது மழலை
அதனதன் கணங்களின்
பதிப்பில் எழுதியது
அர்த்தம் காண
எனக்கே முடிவதில்லை
சிலசமயம் பிரமிப்பாகவும்
பிறிதொரு சமயம்
சலிப்பாகவும்
இருந்தாலும்..
என் வரிகள் படிக்க
எனக்கெப்போதும் சுகமே!
தலைப்புகள் மட்டும்
நிலா ஆய்ந்த நேரம்
மீன்கள் உலா வரும் விடுதி
சேர்மானச்சிக்கல்கள்
புறா இறகு
புகுந்த ஆமை
புனர் பூசம்
நட்சத்திர குழுமம்
நனவான கொலை
நசிந்த கூகை
நடு நிலா என
தலைப்புகள் கிட்டிய அளவு
கவிதைக்குச் சொற்கள்
கிட்டவில்லை
ஆனால் முற்றும் துறக்கவில்லை
முயற்ச்சிகளை
No comments:
Post a Comment