Monday, November 8, 2010

அவள் அவனுக்கான கலவை

எனக்கான உலகில்
நானும்
அவளுக்கான உலகில்
அவளும்
அவளுக்கான உலகில்
நானும்
எனக்கான உலகில்
அவளும்
அவளுக்குகந்த உலகில்
அவனும்
எனக்குகந்த உலகில்
அவளும்
எனினும்
மனதிற்கான உலகில்
என்றும்
ஆய்ந்து கொண்டிருக்கும்
அவனும் அல்லது அவளுக்குமான
அர்த்த மீறல்கள்

No comments: