Monday, November 8, 2010

காய்ச்சலின் பரிமாணங்கள்
தட்டு
வண்டி
நீண்ட பெரு விரல்
மனது முழுக்க போர்வை
குளோரைடு வாசனை
நல்லெண்ணெய் வழிந்தோடிய கனவு
இமைச்சூடு
தலையில்
நரம்பு கட்டிய ஓனான்
பரந்த மணல் வெளி
ஜடமாய் கால்கள்
நிர்வாண வீதி உலா
அனைத்தும் வந்து போக
வாய்த்ததில்லை
என் நோவுக்கான கனாக்களில்
கிருமிகளும், மாத்திரைகளும்

1 comment:

Arunprashath said...

Hai, very super msg. it is very usful to us
by
G.Arunprashath