இழப்பதும்
இழக்கக்கூடியதுமே
இழக்க முடியாதவை !
இழத்தலுக்கான
வலி நிவாரணி
இழத்தலே!
இழந்தவனின் சுகம்
இழந்தவனுக்குத் தெரிவதில்லை!
அடுத்தவனின் இழப்பு
நமது சுகம் என்றான பின்பு.
இழப்பு நிஜம்
இழப்பு வலி
இழப்பு அனுபவம்
இழப்பு ஆச்சர்யம்
இழப்பு பரவசம்
இழப்பு அகங்காரம்
இழப்பு ஆணவம்
இழப்பு தித்திப்பு
இழப்பு வசீகரம்
இழப்பு இழந்ததில்லை எவரையும்!
இழந்து பெற்றது
அறிவியல் கண்டுபிடிப்புகள்
கண்டுபிடிப்பை இழந்தான் இறந்தபின்
இறந்தும் இழக்கவில்லை எனில்
இழப்பு அடுத்தவனின் சுகம் தானே!
இழப்பை விரும்புவோம்
நமது சோகத்தை தள்ளிவைத்தபடி
எவருக்கேனும் இன்பம் அமையட்டும்
நரகாசுரனின் இழப்பு போல
No comments:
Post a Comment