Saturday, November 3, 2012
மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா?
மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா?
மனிதர்களை க்ளோனிங் முறையில் உருவாக்குவதற்கு தடை இருக்கிறது. ரகசியமாக செய்ய முடியாது. மரபணு மாற்றங்களின் மூலம் பத்து பேருடைய ஜீனியங்களை கொண்டுவருவது நடை முறை சாத்தியமில்லை. சமீபத்தில் தனது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற யமனக்காவும், கர்டனும் கூட நாலே நாலு ஜீன்களை மட்டுமே இடைச்செருகி அனைத்து செல்களையும் உருவாக்கும் திறன் படைத்த ஸ்டெம் செல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது அதன் கருவிலுள்ள செல்களை எடுத்து பாதுகாத்து ஏதேனும் உறுப்புகள் சேதம் ஏற்படும் போது அதை உருவாக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. ரத்தத்திலிருந்து (சிவப்பணுக்கள் நீங்கலாக) எடுக்கப்படும் செல்களிலிருந்து எந்த விதமான சேதமடைந்த உறுப்புகளையும் (மூளை, இதயம், அல்சீமர் குறைபாடுகள், இன்னும் பல..) சீர் செய்துவிட முடியும். இதற்கே இவ்வளவு காலமாகிவிட்டது. சரி படம் தானே என்று விட்டுவிடவும் முடியவில்லை என்னவோ அனைத்து தொழில்நுட்பமும் அழிவிற்குத்தான் என்ற முறையில் படமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அரைகுறையாக அறிவியலை, அதன் தொழில்நுட்பத்தை, மக்களிடம்
கொண்டு செல்லும் பொது கவனம் தேவை. பொத்தாம் பொதுவாக உலகம் 2012 ல் அழியபோகிறது என்று சொன்னால்கூட நம்பும் கூட்டம் நம்மிடையே நிறைய உண்டு.
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களில் ஒரே சூழலில் வாழும்போது வெவ்வேறு குணாதிசயம் சாத்தியமா?
சத்தியமாக இல்லை. கிட்டத்தட்ட 99 சதவீதம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அவருக்கு கோபம் வந்தால் இவர் அடிப்பார் போன்ற மூட நம்பிக்கைகள் தவிர்த்து...
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சண்டையெல்லாம் போட முடியுமா?
சாத்தியமே இல்லை ஒரு இதயம் இருக்கும்பட்சத்தில் நெஞ்செலும்பு கூட ஒட்டியே இருக்கும். சர்வசாதரணமாக நடனமோ, சண்டையோ போட முடியாது.
மாற்றானில், சிபோபகுஸ் என்ற இரட்டைப்பிறவி வகையை வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வகை குழந்தைகளுக்கு மார்பெலும்பும், வயிற்றுப் பகுதியும் ஒட்டியிருக்கும்.
டெஸ்ட் ட்யூப் குழந்தைகளில் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சாத்தியமா?
சாத்தியமேயில்லை.
பாலில் கலந்திருக்கும் ஸ்டீராய்டுகளை கண்டறிய முடியாதா?
அதெல்லாம் சும்மா?
L C/MS/MS மூலம் கண்டுபிடிக்கலாம்
ராணுவ ஆராய்ச்சிக் கூடத்திற்கு நினைத்த மாத்திரம் போய்விட முடியாது அமைச்சரே ஆனாலும் கூட.
உக்கரைன் நாட்டுல கால்பந்து தான் பிரதான விளையாட்டு
94 ல தான் ஒலிம்பிகிலேயே கலந்து கொண்டார்கள்.
பதக்கப் பட்டியலில் ஒலிம்பிக்கில் 35 வது இடம்
ஏன் இந்த கொலைவெறி? அந்த நாடு மேல..
இன்னும் ஏராளமான கேள்விகள் உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment